நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்ட வேண்டிய அவசியம் இல்லை – லக்ஸ்மன் கிரியெல்ல

நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு ஒன்றிணைந்த எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போதே சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எதிரணிக்கு எப்போதும் அவசரமான நிலைமையே உள்ளது. கடந்த வாரமும் நாடாளுமன்றம் கூடியது.
இந்த நிலையில், அவசர நாடாளுமன்ற அமர்வு ஒன்றை நடத்துவதற்கான அவசியமில்லை’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.