நாடாளுமன்ற உறுப்பினராக சமன் ரத்னபிரிய பதவிப்பிரமாணம்
In இலங்கை February 5, 2020 4:01 am GMT 0 Comments 1659 by : Dhackshala

நாடாளுமன்ற உறுப்பினராக சமன் ரத்னபிரிய இன்று (புதன்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என நாடாளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே சமன் ரத்னபிரிய நியமிக்கப்படவுள்ளார்.
இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன் பின்னர் அவரின் நியமனம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை, கடந்த 27ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டது.
அதற்கமைய இன்றைய தினம் சமன் ரத்நாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.