News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த
  • தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்!
  • மோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி
  • துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
  • தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
  1. முகப்பு
  2. ஆசிரியர் தெரிவு
  3. நாட்டினை மீண்டும் கயவர்கள் கைகளில் ஒப்படைக்க முடியாது – சஜித்

நாட்டினை மீண்டும் கயவர்கள் கைகளில் ஒப்படைக்க முடியாது – சஜித்

In ஆசிரியர் தெரிவு     October 21, 2018 2:15 am GMT     0 Comments     1632     by : Benitlas

நாட்டினை மீண்டும் கயவர்களின் கைகளில் ஒப்படைக்க முடியாது எனவும், நாட்டில் காணப்படும் இனவாதங்கள், மதவாதங்கள், மொழிவாதங்களுக்கு எப்போதும் நாங்கள் எதிரிகளாகவே இருப்போம் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த நாட்டினை மீண்டும் ஒருமுறை நாடகக்காரர்களுக்கும் வேசம் தரிப்பவர்களுக்கும் ஒப்பனைகலையாமல் மேடைகளில் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஏழை எளிய மக்களின் பசித்த வயிறு தெரியாதவர்களுக்கும் வழங்கமுடியுமா?

கடந்த ஆட்சியில் பேச்சு சுதந்திரம் இருக்கவில்லை, ஊடக சுதந்திரம் இருக்கவில்லை, ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர், ஆர்ப்பாட்டங்கள் செய்தவர்கள் இனங்காணப்பட்டு படுகொலை செய்யும் நிலமையும் காணப்பட்டது. எந்த சுதந்திரமும் அந்த ஆட்சிக்காலத்தில் இருக்கவில்லை.

தாங்களும் தங்கள் குடும்பங்களும் நாட்டினை சூறையாடிவிட்டு இந்த நாட்டு மக்களை ஒரு பொருட்டாக கொள்ளாமல் தங்களது நிலைப்பாடுகளையே நாட்டின் குறிக்கோளாக கொண்டு செயற்பட்டனர்.

அவ்வாறான கயவர்களுக்கு இந்த நாட்டினை தொட்டு தழுவுவதற்கு நாட்டினை கொடுக்கப்போகின்றீர்களா?, இதனை ஒவ்வொருவரும் தங்களது மனசாட்சியுடன் சிந்தித்து பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் பெற்ற அனுபவத்தினை சிந்தித்துபாருங்கள்.

எமது நல்லாட்சியில் இந்த பகுதியில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகாணியை நாங்கள் வழங்கியுள்ளோம். கடந்த ஆட்சியில் ஒருகடுகளவாவது காணிகள் வழங்கப்பட்டுள்ளதா? இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதா?. அவர்கள் இதனையெல்லாம் செய்யமாட்டார்கள், அவர்கள் இவ்வாறானவற்றை தங்களுக்குள் பங்குபோட்டுக்கொள்ளுவார்கள்.

மதவாதங்களை உருவாக்கி, இனவாதங்களை உருவாக்கி சமய ஸ்தலங்களை எரித்துவிட்டு அதில் குளிர்காய்ந்தவர்கள் மக்களினால் விரட்டியக்கப்பட்டனர். மீண்டும் ஒருமுறை எரித்த சமய ஸ்தலங்களுக்கு வருகைதந்து வழிபாடுகளில் கலந்துகொள்கின்றனர்.

இவர்கள் தொடர்பில் மக்கள் நன்றாக சிந்திக்கவேண்டும், அவர்களை வேறுபடுத்தி பார்க்கவேண்டும். இந்த நாட்டில் ஜனநாயகத்தினை அடக்க ஒடுக்கி ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் நாட்டின் வளங்களை சூறையாடியவர்கள், மக்களின் வாழ்விடங்களை அழித்தவர்கள் மீண்டும் ஒருமுறை ஆட்சியில் அமர்ந்து கொள்ளவேண்டும், அந்த மாளிகையில் பள்ளி கொள்ள வேண்டும் என சிந்திக்கின்றனர்.

இந்த நாட்டினை நாங்கள் கயவர்களின் கைகளில் ஒப்படைக்கமாட்டோம். அதேபோன்று இந்த நாட்டில் காணப்படும் இனவாதங்கள், மதவாதங்கள், மொழிவாதங்களுக்கு எப்போதும் நாங்கள் எதிரிகளாகவே இருப்போம்.

இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் மதங்கள், மொழிகளை மறந்து ஒருதாய் பிள்ளைகள்போல் நாம் அனைவரும் ஒன்றாக வாழவேண்டும்.

அதற்காக கடந்த காலத்தில் கசப்பான அனுபவங்களை கொண்டுவந்த தலைவர்களை மீண்டும் ஒருமுறை சிங்காசனத்தில் அமரவைப்பதா அல்லது வீடுகளுக்கு வந்து உங்களது தேவைகளை நிறைவேற்றுபவர்களுக்கு இந்த நாட்டில் இடமளிப்பதா என்பதை மக்களே சிந்திக்கவேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஊடகவியலில் பன்மைத்துவ அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு!  

    மட்டக்களப்பில் ஊடகவியலில் பன்மைத்துவ அறிக்கையிடல் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இடம்பெற்றுள

  • பலமான கூட்டணி அமைத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி: ஜனாதிபதி  

    பலமான கூட்டணியொன்றை அமைத்து தேர்தலில் களமிறங்கினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என ஜனாதிபதி மைத்திரிப

  • அழுத்தம் காரணமாகவே வரவு – செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு: இராதாகிருஷ்ணன்!  

    தமிழ் முற்போக்கு கூட்டணி, அரசாங்கத்திற்கு கொடுத்த அழுத்தம் காரணமாகவே வரவு – செலவுத் திட்டத்தில

  • சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்!  

    சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் இருப்பது போன்று,  அவர்களுக்குரிய முக்கியத்துவம் உரிய முறை

  • மைத்திரிக்கு போட்டியாக வேறொருவரை பஷில் நிறுத்துவார்!- ராவய  

    அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வேட்பாள


#Tags

  • அரசாங்கம்
  • ஐக்கிய தேசிய கட்சி
  • சஜித் பிரேமதாச
  • தேசிய அரசாங்கம்
  • மட்டக்களப்பு
  • மஹிந்த
  • மஹிந்த அணி
  • மைத்திரி
  • ரணில்
  • ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி
    பிந்திய செய்திகள்
  • எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
    எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
    விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
  • தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
    தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
    கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
  • ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்:  விஜித ஹேரத்
    ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்:  விஜித ஹேரத்
  • குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
    குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.