நாட்டினை வந்தடைந்தார் லக்ஸம்பேர்க் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்

லக்ஸம்பேர்க் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் (Jean AnselBorn) ஜீன் அசெல்போர்ன் நாட்டினை வந்தடைந்துள்ளார்.
லக்ஸம்பேர்க் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் நால்வர் அடங்கிய குழுவினர் நேற்றிரவு நாட்டினை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் விமான நிலையத்தில் வைத்து லக்ஸம்பேர்க் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினைரை வரவேற்றுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களை லக்ஸம்பேர்க் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.