நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பொருளாதார வளர்ச்சி அவசியம்: நிதின் கட்கரி
In இந்தியா December 19, 2020 11:32 am GMT 0 Comments 1414 by : Yuganthini

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பொருளாதார வளர்ச்சி மிகவும் அவசியமென நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் நிதின் கட்கரி மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பொருளாதார வளர்ச்சி அவசியம். வறுமையை ஒழிப்பது மோடி அரசின் முன்னுரிமையாகும்.
நமது நாட்டின் கிராமங்களில் உள்ள திறன் மிக்க கைவினைக் கலைஞர்களுக்கு சிறப்பான தளத்தை ஹுனார் ஹாட் வழங்குகிறது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் பொருள்கள் சர்வதேச சந்தைகளை சென்றடையும் போது, நமது கலைஞர்கள் வளம் பெறுகிறார்கள்” என குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.