News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. நாட்டின் குழப்பநிலையை தீர்க்க பொதுத் தேர்தலே ஒரே வழி: உதய கம்மன்பில

நாட்டின் குழப்பநிலையை தீர்க்க பொதுத் தேர்தலே ஒரே வழி: உதய கம்மன்பில

In இலங்கை     October 31, 2018 6:15 am GMT     0 Comments     1591     by : Risha

நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான அரசியல் சூழலுக்குத் தீர்வினை முன்வைக்க, பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்;மை ஆதரவை நிரூபிக்க வேண்டியத் தேவை தமது தரப்புக்கு இல்லை எனவும் அவர் கூறினார்.

கொழும்பில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுக் கொண்டார் என்ற செய்தி வரும் முன்னர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்ட செய்தியே வெளிவந்தது. இதனால், அமைச்சரவை தானாகவே கலைந்தது. அரசமைப்பில் 42 (2) உறுப்புரையில் இந்த விடயம் தொடர்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

அதாவது, அமைச்சரவை கலைந்தவுடன் பிரதமர் பதவியும் செல்லுபடியற்றதாகி விடும். அதேநேரம், 42 (4) உறுப்புரையில் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு இணங்க நாடாளுமன்றில் பெரும்பான்மை உள்ள ஒருவரை நியமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. இந்த காரணத்தினால்தான் மஹிந்த ராஜபக்ஷவை அவர், பிரதமராக நியமித்தார். மேலும், நாட்டில் சிங்கள மொழிதான் தேசிய மொழி. ஆனால், சிங்கள மொழி அரசியலமைப்புக்கும் ஆங்கில அரசியலமைப்புக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன.

பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதென சிங்கள மொழி மூல அரசமைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையானது, ஆங்கில மொழி மூல அரசியலமைப்பில் பிரதமர் மரணித்தால் வேறு ஒரு பிரதமரை நியமிக்க முடியும் என்றே கூறப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர், ஆங்கில மொழி அரசியலமைப்பை பார்த்தக் காரணத்தினால்தான் இவ்வளவு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில், ரணில் விக்கிரமசிங்க உச்சநீதிமன்றத்தைக்கூட நாட முடியும். ஆனால், அங்கு சென்றால் தமக்கு பாதகமான தீர்ப்பு வந்துவிடும் என்ற காரணத்தினால்தான் இதுவரை அவர்கள் உச்சநீதிமன்றை நாடவில்லை.

மேலும், நாடாளுமன்றில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தால் மட்டுமே மஹிந்தவை நீக்க முடியும். அவர்களுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் இதனையும் அவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள். இந்நிலையில், நாடாளுமன்றைக் கூட்டுமாறு சர்வதேச நாடுகள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றைக் கூட்டுமாறு வலியுறுத்த, அமெரிக்காவுக்கு என்ன அதிகாரம் உள்ளது? புதிய வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்காகவே நாடாளுமன்றம் பிற்போடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்க வேண்டுமெனில் பொதுத் தேர்தலை நடத்துமாறு நாம் கோரிக்கை விடுக்கிறோம். மக்களின் ஆணைக்கு இணங்க புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க நாம் தயாராகவே இருக்கிறோம். எனவே, இந்த விடயத்தை மக்களின் தீர்ப்பிற்கு கொண்டுசென்றாலும், அதற்கு முகம் கொடுக்கத் தயாராகவே நாம் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கோட்டாவே அடுத்த ஜனாதிபதியென முடிவு செய்துவிட்டனர் – கம்மன்பில  

    முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவாரெனும்

  • தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்!  

    நைஜீரியாவில் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் என்பன பிற்போடப்பட்டமைக்கு அந்த நாட்டு தேர்தல் ஆணையத்தலைவ

  • நைஜீரியா தேர்தல் ஒரு வாரத்திற்கு பிற்போடப்பட்டது  

    நைஜீரியாவின் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் ஒரு வாரத்திற்கு பிற்போடப்பட்டுள்ளன. நைஜீரியாவில் இன்

  • பல்பொருள் அங்காடியில் சான்ட்விச் திருடிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்!  

    ஸ்லோவேனியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பல்பொருள் அங்காடி ஒன்றில் சான்ட்விச் திருடியதாக கு

  • பின்வரிசை உறுப்பினரை வாக்களிப்பு இயந்திரமாக மட்டும் பயன்படுத்தக்கூடாது: வேலுகுமார்  

    நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவும், சட்டமூலங்களை நிறைவேற்றவும் வெறுமனே வாக்களிப்பு இயந்தி


#Tags

  • General Election
  • Member of Parliament
  • Udaya Gammanpilla
  • உதய கம்மன்பில
  • நாடாளுமன்ற உறுப்பினர்
  • பொதுத் தேர்தல்
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.