நாட்டின் தற்போதைய பாதுகாப்பு குறித்து இரண்டு நாள் விவாதம் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழு இன்று(திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கூடியது.
இதன்போதே நாளை மற்றும் நாளை மறுதினங்களில் விவாதத்தை நடத்துவதற்குக் கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஆதவன் செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.
இதேவேளை, பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த நாடாளுமன்ற பொதுமக்கள் கெலரியை நாளை முதல் மீண்டும் திறப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.