நாட்டின் வளர்ச்சிக்கு சர்வாதிகார தலைவரே அவசியம் – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
In இலங்கை October 9, 2018 10:46 am GMT 0 Comments 1298 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

நாட்டின் வளர்ச்சிக்கு தற்சமயம் ஒரு சர்வாதிகார தலைவரே அவசியம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுற விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹொரன பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் தற்போதைய அரசாங்கம் பல பொருளாதார குறைபாடுகளை கொண்டுள்ளது. குறிப்பாக இப்பர் மற்றும் தேயிலை விலை வீழ்ச்சியடைந்திருக்கின்றது.
அரசாங்கம் தெளிவான பொருளாதார திட்டத்தை கொண்டிராதமையே இதற்கு காரணம் என கூறியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கு சரியான முன்னேற்பாடுகளை எதிர்வரும் 2019 மற்றும் 2020 ற்குள் கொண்டுவர வேண்டும் என்றும் அதற்கான முன்னேற்பாடுகளை இந்த ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.
இவ்வாறான செயற்பாடுகளை கொண்டுவந்து இந்த நாட்டினை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல ஒரு சர்வாதிகார தலைவர் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.