நாட்டில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு 187ஆக உயர்வு!
நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு மோதர பகுதியில் உள்ள வயோதிபர் இல்லத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஹோமகமா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார். இவரது இறப்புக்கான காரணம், கொரோனா தொற்று நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 187ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.