நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்!

இந்துருவ பிரதேசத்தின் கிழக்கு துன்துவ மற்றும் மேற்கு துன்துவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
இதேவேளை, தெஹியோவிட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் தல்துவ கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று மதியம் தனிமைப்படுத்தப்பட்டது.
தல்துவ வாரச்சந்தைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட 72 பேருக்கான பி.சி.ஆர். பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் குறித்த பகுதி முடக்கப்பட்டுள்ளதாக தெஹியோவிட சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் ஐராஜ் கமகே தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.