நாட்டில் மேலும் 769 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்!

நாட்டில் மேலும் 769 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 984 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்து 189 ஆகப் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் இன்னும் ஆறாயிரத்து 931 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அத்துடன், கொரோனா தொற்றினால் இதுவரை 274 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.