நானாட்டானில் கழிவுநீர் அகற்றல் செயற்பாடுகளுக்காக 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு

மன்னார் – நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பாலங்களில் கழிவுநீர் அகற்றும் குழாய்கள் பழுதடைந்துள்ளமை இனங்காணப்பட்டுள்ள நிலையில் கழிவுநீர் அகற்றல் செயற்பாடுகளுக்காக 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் தி.பரஞ்சோதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“மழைக் காலங்களில் கழிவு நீரானது வெளியேற்றப்படாமல் கிராமங்களுக்குள் தேங்கி நின்று மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் கழிவுநீர் அகற்றல் செயற்பாடுகளுக்காக நானாட்டான் பிரதேச சபையின் 7ஆவது அமர்வின் போது 10 இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கழிவுநீர் குழாய்கள் பழுதடைந்து திருத்தம் செய்ய வங்காலை, நறுவிலிக்குளம், மடுக்கரை, ஒலிமடு, செட்டியார் கட்டையடம்பன் போன்ற கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.