நான்கு அமைச்சுகளுக்கான செயலாளர்களை நியமிக்க நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு ஒப்புதல்
In இலங்கை December 6, 2020 10:17 am GMT 0 Comments 1466 by : Yuganthini

நான்கு அமைச்சுகளுக்கான செயலாளர்கள் மற்றும் ஒரு தூதுவரை நியமிப்பதற்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு, ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கமைய சுற்றாடல் அமைச்சின் செயலாளராக டாக்டர் அனில் ஜாசிங்க, நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக டாக்டர் பிரியத் பாண்டு விக்ரமா, உயர் கல்வி அமைச்சின் செயலாளராக பேராசிரியர் கபிலா பெரேரா மற்றும் நீதி அமைச்சின் செயலாளராக எம்.எம்.பி.கே.மாயதுன்னேவை நியமிக்க நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு, ஒப்புதல் அளித்துள்ளது.
அதேபோன்று கட்டாருக்கான இலங்கையின் புதிய தூதுவராக எம். மொஹமட்டையும் நியமிக்க நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.