நான் கோபமடைந்ததே இல்லை: நரேந்திர மோடி
In இந்தியா April 24, 2019 6:42 am GMT 0 Comments 2050 by : Yuganthini

நான் அலுவலக உதவியாளராக இருந்த நாள் முதல் இன்று வரை எந்த சந்தர்ப்பத்திற்காகவும் கோபமடைந்ததில்லையென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அரசியல் விடங்களில் தொடர்பில்லாத நடிகர் அக்ஷயகுமார், பிரதமர் நரேந்திர மோடியுடன் நேர்காணலொன்றில் ஈடுபட்டிருந்தார். இதன்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறியுள்ளதாவது,
“கோபம் என்பது மனித குணத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் கோபப்படுகின்றமையினால் எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும்.
அந்தவகையில் நான் அலுவலக உதவியாளராக இருந்த காலம் முதல் இன்றுவரை கோபம் ஏற்படுவதற்கு எந்ததொரு சூழ்நிலையும் எனக்கு ஏற்படவில்லை.
மேலும் என்னிடம் பணிபுரியும் யாரிடமும் கூட நான் கோபத்தை ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை. சிலவேளைகளில் கண்டிப்பாக இருந்து இருக்கின்றேன்.
ஆனால் கண்டிப்புக்கும் கோபத்துக்கும் வேறுபாடுகள் உண்டு” என மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.