நான் தவறு செய்துள்ளேன் : சர்சை நடிகை!
In சினிமா November 18, 2019 7:01 am GMT 0 Comments 1481 by : Krushnamoorthy Dushanthini

தான் நல்லவள் கிடையாது. தவறு செய்துள்ளேன் என சர்சை நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், நான் நல்லவள் கிடையாது. தவறுகள் செய்துள்ளேன். அதை மறந்துவிட்டு புது வாழ்க்கையைத் தொடங்கப் போகிறேன். உங்கள் வீட்டுப் பெண்ணாக நினைத்து மறந்து மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
சினிமாவில் பெரிய இடத்தைத் பிடிக்க ஆசை. அதுக்குத் தான் இவ்வளவு போராட்டமும். சில படங்களில் நடித்து வருகிறேன். இனிமேல் முழு வாழ்க்கையும் சென்னையில் தான். என்னைச் சிலர் அரசியலுக்கு அழைத்துள்ளனர்.
நானும் அரசியலுக்கு வரலாம் என்று ஆசைப்படுகிறேன். அது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அரசியலுக்கு வந்தாலும் கூட யாராவது தவறாக நடந்தால் அதையும் பயமின்றி வெளிப்படுத்துவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.