நாளாந்தம் பி.சி.ஆர் மேற்கொள்ளப்படும் 13000 பேரில் 5.5 வீதமானவர்களுக்கு தொற்று
In இலங்கை February 8, 2021 11:09 am GMT 0 Comments 1388 by : Dhackshala

இலங்கையில் நாளாந்தம் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படும் 13000 பேரில் 5.5 வீதமானவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பி.சி.ஆர் சோதனைகளுடன் தொடர்புபட்ட சிரேஷ்ட மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாளாந்தம் 12000 முதல் 13000 பி.சி.ஆர் துரித அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுபவர்களில் 5.5 வீதமானவர்கள் நோயாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் நிலைமையில் எந்த முன்னேற்றமுமில்லை எனத் தெரிவித்துள்ள மருத்துவர், ஆனால் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்வதை தடுப்பதற்காக அதிகாரிகள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.