நாளை வெளிவருகிறது Nota படத்தின் டெய்லர்!
நடிகர் Vijay Devarakonda நடிக்கும் Nota என்னும் திரைப்படத்தில் முதல் காட்சி வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாளை (வியாழக்கிழமை) டெய்லர் வெளியிடப்படவுள்ளது.
இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில், கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளிவரும் இப்படத்தில், Vijay Devarakonda ஒரு அரசியல் தலைவராக நடிக்கின்றார்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ்.இசையமைத்துள்ளார்.
தெலுங்கில் வெளிவந்த அர்ஜீன் ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு தேசத்தில் மட்டுமின்றி தமிழ் , மலையாளத்திலும் ரசிகர்களை திரட்டிக்கொண்ட Vijay Devarakonda, அதன் பின்னர் மகாநதி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் மக்களிடையே அதிக இடம்பிடித்து கொண்டார்.
அதது நடிப்பால் இளைஞர்களை வசப்படுத்திய Vijay Devarakonda வின் கீதா கோவிண்டம் என்னும் தெலுங்கு படமும் தமிழ் ரசிகர்களை அவர் பக்கம் ஈர்த்தது.
இந்நிலையில் அடுத்து அவர் நடிக்கும் Nota என்னும் படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் இந்நிலையில், குறித்த படத்தின் டெய்லர் நாளை வெளிவரவுள்ளமை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.