நீதிமன்ற அனுமதியுடன் நாவல்காடு பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு
In இலங்கை December 31, 2020 9:20 am GMT 0 Comments 1825 by : Dhackshala
முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவல்காடு பகுதியில் நேற்று இனங்காணப்பட்ட மனித எச்சங்களை மீட்கும் பணிகள் நீதிமன்ற அனுமதிக்கு அமைவாக இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் பதில் நீதிபதி ந.சுதர்சன் முன்னிலையில் குறித்த அகழ்வு மற்றும் மீட்பு பணிகள் இடம்பெற்றன.
தடயவியல் பொலிஸார், பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இணைந்து குறித்த மனித எச்சங்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, நைலோன் சாரம், t-shirt, மண்டையோடு மற்றும் எலும்புகள் உள்ளிட்ட தடயப் பொருட்கள் மீட்கப்பட்டன.
மேலும் இந்த விடயம் தொடர்பாக முள்ளியவளை பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து தொடர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.