நியூசிலாந்தில் கிட்டத்தட்ட 100 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கின
In அவுஸ்ரேலியா November 25, 2020 8:39 am GMT 0 Comments 1620 by : Jeyachandran Vithushan

நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள சதம் தீவுகளில் சுமார் 100 பைலட் திமிங்கலங்கள் மற்றும் பாட்டில்நோஸ் டொல்பின்கள் கரையொதிங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதி தொலைதூரத்தில் இருப்பதனால் மீட்பு முயற்சிகள் தடைபட்டுள்ளன என்றும் அவர்கள் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளனர்.
அத்தோடு குறித்த கூட்டத்தில் மொத்தம் 97 பைலட் திமிங்கலங்கள் மற்றும் மூன்று டொல்பின்கள் உயிரிழந்துவிட்டதாகவும் நியூசிலாந்தின் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
இந்த இடத்தில் 26 திமிங்கலங்கள் மட்டுமே இன்னும் உயிருடன் இருப்பதாகவும் அதில் பெரும்பாலானவை மிகவும் பலவீன மடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கடந்த 1918 ஆம் ஆண்டில் 1,000 ஒரே இழையில் உயிரிழந்ததாகவும் அங்கு இது வழக்கமாக இடம்பெறும் நிகழ்வு என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அண்மையில் உலகின் மிகப்பெரிய நூறுகணக்கான திமிங்கலங்கள் அவுஸ்ரேலிய ஆழமற்ற கடற்கரையில் நீரில் சிக்கித்தவித்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.