நியூயோக்கில் துப்பாக்கிச்சூடற்ற வாரக் கொண்டாட்டம்!
In அமொிக்கா October 16, 2018 10:59 am GMT 0 Comments 1524 by : Farwin Hanaa

அமெரிக்காவின் நியூயோக் நகரில் 25 வருடங்களுக்குப் பின்னர் துப்பாக்கிச் சூடுகளற்ற முதல் வார இறுதிநாட்கள் கொண்டாடப்பட்டுள்ளன.
தங்களுடைய கடமையை கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் எந்தவித துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமோ, கொலை நடவடிக்கையோயின்றி புரிந்துள்ளதாக நேற்று (திங்கட்கிழமை) நியூயோக் பொலிஸார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தசாப்தங்களுக்குப் பின்னர் இவ்வாறான துப்பாக்கிச் சூடுகளே அற்ற வார இறுதி நாட்களைக் கொண்டாடுவதையிட்டு பொது மக்கள் மற்றும் நாட்டின் பிரஜைகள் மிகவும் பெருமை கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1993 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிக சனத்தொகை (8.5 மில்லியன்) கொண்ட நகரமாக நியூயோக் அமைந்திருந்த வேளையில், இவ்வாறான துப்பாக்கிச் சூடுகளற்ற வாரம் கொண்டாடப்பட்டதை அவர் நினைவு கூறியியிருந்தார்.
1850 களிலிருந்து வருடாந்தம் அதிகரித்துவந்த கொலைச் சம்பவங்களானது, கடந்த 2017 ஆம் ஆண்டு, 292 ஆகக் குறைவடைந்து மீண்டும் இவ்வருடம் அதிகரித்திருப்பதையும் சுட்டிக்காட்டி வறுத்தம் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.