நியூஸிலாந்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது மாவீரர் நாள்!

நியூசிலாந்து மாவீரர் பணிமனையால் ஒக்லாந்து நகரத்தில் உணர்வு பூர்வமாக 2020ஆம் ஆண்டு மாவீர்ர் நாள் நினைவுகூரப்பட்டது.
அந்நாட்டு நேரப்படி, மாலை 7.05 மணிக்கு பொதுச்சுடரினை வைத்திய கலாநிதி வசந்தன் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து தேசியக் கொடியேற்றம் இடம்பெற்றது.
இதைத் தொடர்ந்து, ஈகைச்சுடரை கப்டன் பேரின்பநாதனின் அக்கா ஏற்றிவைத்ததுடன் தொடர்ந்து மாவீரர் பாடலுடன் மாவீரர்களின் படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
இதேவேளை, கலைநிகழ்வுகள் மற்றும் சிறப்பரைகளும் இடம்பெற்றன.
மேலும், சிறப்பு அழைப்பாளராக நியூசிலாந்து அகதிகள் மற்றும் கலாசார அமைப்புகளின் இயக்குநர் அகிலிலு சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில், தான் எரித்திரிய நாட்டைச் சேர்ந்தவரென்றும் இதனால் ஈழத் தமிழர்களினதும் விடுதலைப் போராட்டத்தினதும் உணர்வுகளை தங்களால் உணரமுடியுமெனன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.