நியூஸி. கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணியில் ஆறு பேருக்கு கொரோனா!

நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணியில், ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
புறப்படுவதற்கு முன்பாக பாகிஸ்தானில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் எந்த வீரருக்கும் பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நியூஸிலாந்துக்கு சென்றதும் நடத்தப்பட்ட பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் தனியாக வேறு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக நியூஸிலாந்து கிரிக்கெட் சபை கூறியுள்ளது.
எனினும், இதில் வீரர்கள் எத்தனை பேர், பயிற்சி உதவியாளர் எத்தனை பேர் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் முதலாவதாக நடைபெறும் ரி-10 தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் மாதம் 18ஆம் திகதி ஒக்லாந்தில் நடைபெறவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.