நியூஸி. முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியிலிருந்து சதாப் கான் விலகல்!

நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் தொடை காயத்துடன் நியூஸிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்டில் சதாப் கான் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜாபர் கோஹர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அணித்தலைவர் பாபர் அசாம் உபாதையில் பாதிக்கப்பட்டுள்ளதால், மொஹமட் ரிஸ்வான் அணியை வழிநடத்துவார்.
இதேபோல, அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இமாம் உல் ஹக்கும் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,
மொஹமட் ரிஸ்வான் தலைமையிலான அணியில், அபிட் அலி, அசார் அலி, பஹீம் அஷ்ரப், பவாட் அஹமட், ஹரிஸ் சொஹைல், இம்ரான் பட், மொஹமட் அப்பாஸ், நஷீம் ஷா, சப்ராஸ் அஹமட், ஷாயின் ஷா அப்ரிடி, ஷான் மசூத், சொஹைல் கான், யாசிர் ஷா அல்லது ஜாபர் கோஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதலாவது டெஸ்ட் போட்டி மவுணட் மவுன்கானுயில் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.