நியூஸி. ரி-20 தொடர்: பாகிஸ்தான் அணியில் சர்பராஸ் அகமது- ஹூசைன் தலாத்துக்கு வாய்ப்பு!

நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
18பேர் கொண்ட அணியில் முன்னாள் தலைவர் சர்பராஸ் அகமது மற்றும் சகலதுறை வீரரான ஹூசைன் தலாத் ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், ஜாபர் கோஹர் மற்றும் ரோஹைல் நசீர் ஆகியோருக்கு பதிலாக அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஹுசைன் இறுதியாக 2019ஆம் ஆண்டு செஞ்சுரியனில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடியிருந்தார். அதேபோல சர்பராஸ் அகமது சிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் இடம்பெற்றிருந்த போதும் விளையாடவில்லை.
சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்.
பாபர் அசாம் தலைமையிலான அணியில், சதாப் கான், அப்துல்லா ஷாஃபிக், பஹீம் அஷ்ரப், ஹைதர் அலி, ஹரிஸ் ரவூப், ஹூசைன் தலாத், இப்திகார் அகமது, இமாத் வாசிம், குஷ்டில் ஷா, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது மூசா கான், சர்பராஸ் அகமது, ஷாஹீன் ஷா அப்ரிடி, உஸ்மான் காதிர் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்துக்கு சென்றுள்ளது. இதில் முதலாவதாக நடைபெறும் ரி-20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி ஒக்லாந்து- ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.