நியூ மார்க்கெட் பகுதியில் ஒரு பெண் மற்றும் சிறுவனின் உடல் கண்டெடுப்பு
In இங்கிலாந்து April 27, 2019 10:09 am GMT 0 Comments 2172 by : Jeyachandran Vithushan

சஃபோல்க் உள்ள நியூ மார்க்கெட் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து ஒரு பெண் மற்றும் சிறுவன் இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் குறித்த சடலங்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகளை துப்பறிவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு இந்த சம்பவம் தொடர்பாக பெண் மற்றும் குழந்தையின் உறவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.