நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் சீராய்வு மனு தள்ளுபடி
In இந்தியா January 14, 2020 9:11 am GMT 0 Comments 2000 by : Yuganthini

டெல்லி மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா வன்கொடுமை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வினய், முகேஷ் சிங் மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மரண தண்டனையை இரத்து செய்யக்கோரி வினய், முகேஷ் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுக்களையே உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்துள்ளது.
குறித்த குற்றவாளிகள் 4 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி, தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையிலேயே மரண தண்டனை விதிக்கப்பட்ட வினய், முகேஷ் சிங் ஆகியோர் சட்டத்தரணி ஊடாக சீராய்வு மனுவொன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.