நிர்பயா வழக்கு விவகாரம் : குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் ஆளுநர்!
In இந்தியா January 16, 2020 7:09 am GMT 0 Comments 1558 by : Krushnamoorthy Dushanthini

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை டெல்லி துணைநிலை ஆளுநர் நிராகித்துள்ளார்.
குறித்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நால்வரையும் எதிர்வரும் 22-ம் திகதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த கருணை மனுவை டெல்லி துணை நிலை ஆளுநர் நிராகரித்து, அதனை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.