நிலஅதிர்வு தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதற்கு 11 பேர் அடங்கிய நிபுணர் குழு

கண்டி நகரின் பல பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்ட நிலஅதிர்வு தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதற்கு 11 பேர் அடங்கிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்டி நகரின் பல பகுதிகளில் அண்மையில் பதிவு செய்யப்பட்ட நில நடுக்கம் மற்றும் எதிர்காலத்தில் அதன் தாக்கம் என்பன தொடர்பில் நிபுணர் குழுவினால் ஆராயப்படவுள்ளது.
இதேவேளை தொடர்ந்தும் நிலநடுக்கம் ஏற்படுமிடத்து அதனால் ஏற்படும் சேதங்களை தவிர்ப்பது தொடர்பிலும் குறித்த குழுவினரால் விரிவாக ஆராயப்படவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.