நிவர் புயலின் அதிதீவிரம் குறைந்தது- வானிலை மையம் அறிவிப்பு!

அதிதீவிர புயலாக இருந்த நிவர் புயல் தற்போது வலுவிழந்து தீவிர புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், காற்றின் வேகம் வெகுவாகக் குறைந்துள்ளதாக ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தற்போது புதுச்சேரி அருகே கரையைக் கடந்து வருகிறது.
இந்தப் புயல் இன்னும் மூன்று முதல் நான்கு மணிநேரத்தில் முழுமையாகக் கரையைக் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் இருந்து 20 கிலோமீற்றர் தொலைவிலும் சென்னையில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவிலும் புயல் தற்போது நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.