நிவர் புயல் : சேதங்களை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை
In இந்தியா November 30, 2020 5:11 am GMT 0 Comments 1452 by : Krushnamoorthy Dushanthini

நிவர் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழு இன்று ( திங்கட்கிழமை) தமிழகத்திற்கு வருகைத்தரவுள்ளது.
அவர்கள் நாளை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளனர்.
வங்கக் கடலில் உருவான நிவர் புயலானது புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதன் விளைவாக சென்னை, கடலூர், செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்துடன் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்துள்ளன. இதனை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
ஆகவே தமிழகத்தில் சேதமானவை விவரங்களை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. அதன்படி நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.