நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே கரையைக் கடக்கத் தொடங்கியது

நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிதீவிர புயலாக நிவர் புயல் மாறியுள்ளதுடன் புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோமீற்றர் தொலைவில் கரையை கடக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக காரைக்கால்- மாமல்லபுரம் இடையே இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, தற்போது கரையைக் கடக்கத் தொடங்கியுள்ள நிவர் புயல் முழுவதுமாக கரையை கடக்க இந்திய நேரப்படி அதிகாலை மூன்று மணியாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிவர் புயல் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், பேரிடர் மீட்புக் குழுக்கள், பொலிஸார், மற்றும் கடற்படை உட்பட பல்வேறு துறையினரும் தயார் நிலையில் உள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் அறிவித்துள்ளன.
இதேவேளை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் புயல் தாக்கத்தின் முன்னெச்சரிக்கையாக பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.