நீங்களும் ஒரு நிறுவனத்தின் ஊழியரா? – பணிக்கொடை குறித்து அறிவீர்களா?

ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணி புரிந்த ஒருவருக்கு, அவர் வேலையிலிருந்து ஓய்வு பெறும் போது அல்லது விலகும் போது, அந்நிறுவனம் அல்லது முதலாளியால் கொடுக்கப்படுவதாகும்.
கடந்த 1983 இல் payment of gratuity act (12) என்னும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் பணியாளர் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், அவர்களுக்கு பணிக்கொடை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது பணியாளர் மற்றும் நிறுவனம் என்று இரு தரப்பிற்கும் சமமான சட்டமாகும்.
அதாவது 12 மாதத்தில் ஒரு நிறுவனம் அல்லது ஒரு அமைப்பின் ஒரு நாள் பணியாளர்களின் எண்ணிக்கை, 10 அல்லது அதைவிட அதிகமாக இருந்தால் அது gratuity சட்டத்தின் வரப்பிற்குள் உட்படும்.
கிட்டத்தட்ட ஒரு நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் இந்த gratuity ஐ பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவர்.
எனினும் gratuity ஐ பொறுத்தவரை, ஊதியம் மற்றும் பணி புரிந்த காலம் ஆகிய இரு விடயங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. இந்த இரு காரணிகளை அடிப்படையாக கொண்டே பணிக்கொடை பணம் வழங்கப்படுகிறது.
குறிப்பாக வருமான வரி சட்டத்தின்படி பணிக்கொடையை கணக்கிட தனி போமிலா உள்ளது. எனவே அதை அடிப்படையாக கொண்டு, இந்த பணிக்கொடை கணக்கிடப்பட்டு உரிய வகையில் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.
எனவே எந்த ஊழியர்களும் அச்சப்பட தேவையில்லை. நீங்கள் வேலையை விட்டு விலகும் போது, பணிக்கொடை வழங்கப்படவில்லை என்றால், அச்சமின்றி சட்டத்தை நாடுவதன் மூலம் நீதியை பெற்று கொள்ளலாம்.
உங்கள் உழைப்பின் பயனாக இதுவும் ஒரு சேமிப்பு என்பதால், நீங்களும் பணிக்கொடையை பெற்றுக் கொள்ள தவறி விடாதீர்கள்.
ஆனால் இதில் உள்ள முக்கிய விடயம், வேலையில் இருந்து விலகிய பின்னரோ, அல்லது வேலையை விட்டு ஓய்வெடுத்த பின்னரோ, எண்ணி 30 நாட்களுக்குள் பணிக்கொடை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.