நீடிக்கும் ஐ.தே.க.இன் தேசியப்பட்டியல் விவகாரம் – முடிவு எட்டப்படுமா இன்று?
In இலங்கை November 23, 2020 2:43 am GMT 0 Comments 1304 by : Dhackshala
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினரைத் தெரிவு செய்வது குறித்து இன்று (திங்கட்கிழமை) இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்
மேலும் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்கள் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அறிந்துக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம், கட்சியின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தன செயற்பட்டு வரும் நிலையில், கட்சித் தலைமைத்துவத்துக்கு அவர் தெரிவு செய்யப்படுவதில் எந்த எதிர்ப்பும் இருக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார கூறியுள்ளார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைந்திருந்த நிலையில், ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் மாத்திரமே கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.