நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து
In இலங்கை February 12, 2021 5:10 am GMT 0 Comments 1259 by : Dhackshala

நீதிமன்ற கட்டமைப்பு அனைத்தையும் டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த உடன்படிக்கை நேற்று (வியாழக்கிழமை) கைச்சாத்திடப்பட்டதாக நீதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
நீதிமன்ற கட்டமைப்பில் ஆவணங்களை பராமரித்தல், முகாமைத்துவம், வழக்குகள் குறித்த அறிக்கைகளை வைத்திருத்தல், விநியோகத்தில் உள்ளிட்ட அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளும் இதன் மூலம் டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் நீதியமைச்சு, நீதிச்சேவைகள் ஆணைக்குழு, தொழில்நுட்ப அமைச்சு என்பன இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படுத்தப்படவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.