நீர்கொழும்பில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது
In இலங்கை May 6, 2019 2:39 am GMT 0 Comments 2245 by : Yuganthini

நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு காலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் மக்களிடத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, கட்டுநாயக்க, திவுலபிட்டி, கட்டான ஆகிய பகுதிகளுக்கே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.