நீலங்காடு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க எடுத்த முயற்சி முறியடிப்பு!

காரைநகர் நீலங்காடு பகுதியில் கடற்படையின் தேவைக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க எடுத்த முயற்சி இன்று(வெள்ளிக்கிழமை) முறியடிக்கப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர்கள், அரசியவாதிகள் இணைந்து கணியை அளக்க வந்த நில அளவை திணைக்கள அதிகாரிகளை வழிமறித்து போராட்டம் நடத்தியே காணி சுவீகரிப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் ஜே.45 பிரிவுக்கு உட்பட்ட 67 பேருக்கு சொந்தமான 50 ஏக்கர் காணிகளை கடற்படை தமது தேவைகளுக்காக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி குறித்த காணிகளை அளவிடும் பணிகளுக்காக நில அளவை திணைக்களத்தினர் வருகை தந்த போது அங்கு ஒன்று கூடியவர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்பட்டுத்தினர்.
இதனை அடுத்து நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.