நுவரெலியாவில் சுற்றாடல் நேயமிக்க வேலைத்திட்டங்கள் நாளை ஆரம்பம்!

நுவரெலியா மாவட்டத்தின் சுற்றுலா அபிவிருத்தி வலயத்தில் சுற்றாடல் நேயமிக்க வேலைத்திட்டங்கள் நாளை(சனிக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளன.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
கித்துள்கலவிலிருந்து நுவரெலியா வரையும், நுவரெலியாவிலிருந்து கண்டி, பதுளை வரையும் விசேட சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இந்த பிரதான வீதிகளின் இரு மருங்கும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நவீனமயப்படுத்தப்படவுள்ளது.
பூங்கா, நடைபாதை, வர்த்தக கொட்டில்கள், சிற்றுண்டிச்சாலை உட்பட ஹொட்டல்களும் இங்கு அமைக்கப்படவுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.