நுவரெலியாவில் 10 துப்பாக்கி ரவைகள் மற்றும் வெடிகுண்டுகள் மீட்பு: மூவர் கைது
In இலங்கை December 11, 2020 9:21 am GMT 0 Comments 3241 by : Yuganthini

நுவரெலியா– இராகலை, புரூக்சைட் பகுதியில் துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 10 ரவைகள் மற்றும் கற்களை உடைக்க பயன்படுத்தும் 12 வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் சம்பவம் தொடர்பாக, மூன்று சந்தேகநபர்களை இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிபடையினர் கைது செய்துள்ளனர்.
இராகலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதிக்கு காரொன்றில் நேற்று (வியாழக்கிழமை) இரவு, சந்தேகநபர்கள் சென்றுக் கொண்டிருந்த வேளையில், இராணுவத்தின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்படி காரை இராகலை- புரூக்சைட் பகுதியில் வைத்து நிறுத்தி, அவர்கள் சோதனை செய்துள்ளனர்.
இதன்போதே துப்பாக்கி ரவைகள் மற்றும் வெடிகுண்டுகள் இராணுவத்தின் புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், இராகலை பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை இராகலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.