நுவரெலியா- தண்டுகலா பகுதிக்குள் உள் நுழைய, வெளியேற தடை
In இலங்கை December 5, 2020 11:16 am GMT 0 Comments 1463 by : Yuganthini
நுவரெலியா- ஹற்றன் நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்டுகலா தோட்டத்தின் மேல்பிரிவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தண்டுகலா பகுதி முடக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து எவரும் வெளியேறுவதற்கும் உள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆக்ரோயா பகுதியிலும் கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தண்டுகலா தோட்டத்தில் ஏற்கனவே ஐந்து கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் இன்று (சனிக்கிழமை) வெளியாகின. அதில் 16பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களை, கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கு சுகாதார அதிகாரிகளினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பில் தொழில் செய்த நிலையில், ஊர் திரும்பியவர்கள் மூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.