நெடுங்குளத்தில் காணி சுவீகரிப்பு: மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து நில அளவையாளர்கள் வெளியேற்றம்
In இலங்கை January 21, 2020 5:35 am GMT 0 Comments 1670 by : Yuganthini
யாழ்ப்பாணம்- கொழும்புத்துறை, நெடுங்குளம் பகுதியில் பொது மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
நெடுங்குளம் பகுதியிலுள்ள காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுக்குச் சென்ற யாழ்ப்பாண நில அளவைத் திணைக்களத்தினர் காணிகளை அளவீடு செய்யாமல் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
கொழும்புத்துறை- நெடுங்குளம் பகுதியில் பொது மக்களுக்குச் சொந்தமான இந்த காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் மேற்கொள்வதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் அங்கு சென்றிருந்தனர்.
எனினும் காணிகளை அளவிடுவதற்கு அதன் உரிமையாளர்களும் அப்பகுதி மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதன்போது நில அளவைத் திணைக்களத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு யாழ்.பிரதேச செயலாளர் சுதர்சன் வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
ஆயினும் மக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் தொடர்ந்து தெரிவித்த எதிர்ப்புக்களையடுத்து காணி அளவீடுகள் மேற்கொள்ளாமல் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட பிரதேச செயலாளர், பொது மக்களின் எதிப்புக்களால் இந்த அளவீடுகளை நிறுத்துவதற்கும், இது சம்மந்தமாக ஆராய்ந்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.