நெடுந்தீவுக்கு படகில் சென்ற மீனவர்கள் இருவர் மாயம்!
In இலங்கை February 22, 2021 5:07 am GMT 0 Comments 1187 by : Vithushagan

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர் என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டவேளை அவர்கள் பயணித்த படகு மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் கூறினர்.
குறிகாட்டுவானிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.45 மணிக்கு நெடுந்தீவுக்கு திரும்பிய மீனவர்கள் இருவரே இவ்வாறு காணாமற்போயுள்ளனர்.
நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் (வயது-20) நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த றொபின்சன் (வயது-40) ஆகிய இருவருமே காணாமற்போயுள்ளனர்.
அவர்களை தேடும் பணியை கடற்படையினர் முன்னெடுத்த போது படகு நெடுந்தீவு கரையில் மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.