நெல்லுக்கான உத்தரவாத விலை அதிகரிப்பு

விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லிற்கான உத்தரவாத விலை அதிகரிக்கப்படவுள்ளது.
இம்முறை சில இடங்களில் நெல் அறுவடையைப் பெற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பாரிய நீர்ப்பாசனக் குளங்கள் சார்ந்த நெற்செய்கைகளில் மாத்திரமே அறுவடை கிடைத்துள்ளது.
கடந்த பல வருடங்களாக விவசாயிகளின் நெல்லுற்பத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
அந்தவகையில், இம்முறை கொள்வனவு செய்யும் ஒரு கிலோ நாட்டரிசியின் விலையை 5 ரூபாவால் அதிகரித்து 38 ரூபாவில் இருந்து 43 வரை உயர்த்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கிலோ சம்பா நெல்லின் விலை 41 ரூபாவில் இருந்து 46 ரூபாவிற்கு அதிகரிக்கப்படும்.
கட்டுப்பாட்டு விலை விதிக்கையில் தனியார் வர்த்தகர்களும் இவற்றை விட கூடுதலான விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்ய முற்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.