நோட்ரே டாம் தீவிபத்து: அதிர்ச்சியில் சர்வதேசம்!

பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற தீவிபத்து உலகெங்கிலுமுள்ள மக்களை ஆழ்ந்த கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.
நோட்ரே டாம் தீவிபத்து தொடர்பாக மிகுந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் அளிப்பதாக ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோட்ரே டாம் தேவாலய தீவிபத்து மிகவும் கொடூரமானது எனவும் தமது சிந்தனை பிரஸ் மக்களோடும் தீவிபத்தை எதிர்த்துப் போராடும் அவசர சேவை பிரிவினருடனும் உள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவாலயம் தீப்பற்றி எரிவதை காண்பது மிகவும் கொடூரமாக உள்ளதாகவும் தீயை கட்டுப்படுத்துவதற்கு பறக்கும் நீர் வண்டிகள் பயன்படுத்தப்பட வேண்டுமெனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
நோட்ரே டாம் தேவாலயம் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய கலாசாரத்தின் சின்னமாகுமென தெரிவித்த ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்கல் தீவலயத்தின் தீவிபத்து மிகுந்த வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விலைமதிப்பற்ற பாரம்பரியமான நோட்ரே டாம் தேவாலயத்தை காப்பாற்றவும் மீட்டெடுப்பதற்கும் பிரான்சுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு தாம் தயாராக உள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.