நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற விபத்து குறித்து பொலிஸார் தீவிர விசாரணை!

நோர்த் யோர்க் வர்த்தக வெதுப்பகம் ஒன்றில் இடம்பெற்ற விபத்து குறித்து, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கீல் வீதி மற்றும் ஸ்டீல்ஸ் அவனியூ பகுதியில் அமைந்துள்ள வர்த்தக வெதுப்பகம் ஒன்றில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) இரவு 9.45 மணியளவில் இந்த விபத்து சம்பவித்தது.
இதன்போது அங்கிருந்த ஒருவர் வாகனம் ஒன்றிற்கும், பிறிதொரு பொருளுக்கு இடையே சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவ்விபத்து எவ்வாறு நேர்ந்தது என்பது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.