நோர்வேயின் போர்க்கப்பல் எண்ணெய் தாங்கி கப்பலுடன் மோதல்!

மால்டாவின் எண்ணெய் தாங்கி கப்பலுடன் மோதிய நோர்வேயின் போர்க்கப்பலில் இருந்தத 137 உறுப்பினர்களும் வௌியேற்றப்பட்டுள்ளனர்.
பேர்கனுக்கு அருகில் உள்ள ஜெல்டர்ஜோட் பகுதியில் நேற்று (03:00 GMT) மாலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 8 பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்தநிலையில், குறித்த பீரங்கிக்கப்பல் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ ராணுவ பயிற்சிகளுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே நோர்வேயின் போர்க்கப்பல் இந்த அனரத்தத்திற்கு முகம் கொடுத்துள்ளது.
இதுதவிர, எண்ணெய்த் தாங்கிக் கப்பல் சிறியளவு சேதமடைந்துள்ளதுடன் அதில் எந்தவித கசிவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து ஒரு பெரிய எரிபொருள் முனையையும், எரிவாயு தொழிற்சாலையையும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.