நோர்வேயில் பாரிய நிலச்சரிவு: 10பேர் காயம்- 21பேர் மாயம்!

தென்கிழக்கு நோர்வேயில் உள்ள ஜெஜெர்ட்ரம் நகராட்சியின் நிர்வாக மையமான அஸ்க் நகரில் ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதில், 10பேர் காயமடைந்ததோடு 21பேர் காணமல் போயுள்ளனர்.
மேலும், நிலச்சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் சுமார் 700 பேர் இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
தலைநகர் ஒஸ்லோவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெஜெர்ட்ரம் நகராட்சியில் ஒரு குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
அஸ்க் கிராமம் வழியாக ஒரு வீதியின் குறுக்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு கார்கள் கடந்து செல்ல முடியாத ஆழமான பள்ளத்தாக்கை விட்டுச் சென்றது.
காணொளி காட்சிகள் ஒரு வீடு பள்ளத்தாக்கில் விழுவது உள்ளிட்ட வியத்தகு காட்சிகளைக் காட்டியது. புகைப்படங்கள் குறைந்தது எட்டு வீடுகள் அழிக்கப்பட்டதைக் காட்டியது.
பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ரோஜர் பெட்டர்சன் இதுகுறித்து கூறுகையில், “காணாமல் போனவர்கள் குறித்து எந்த அறிக்கையும் இல்லை, ஆனால் இடிந்து விழுந்த கட்டிடங்களில் மக்கள் இருப்பதற்கான சாத்தியத்தை அதிகாரிகளால் நிராகரிக்க முடியவில்லை.
இப்பகுதியில் வசிக்க பதிவுசெய்யப்பட்ட 21 பேர் கணக்கிடப்படவில்லை.
21 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றியிருக்கலாம் அல்லது இன்னும் நிலச்சரிவு பகுதியில் இருக்கலாம்” என கூறினார்.
இதனிடையே அங்கு தற்போது தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.