பகவத் கீதையில் பொதிந்துள்ள உன்னத இலட்சியங்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளது – மோடி

பகவத் கீதையில் பொதிந்துள்ள உன்னத இலட்சியங்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
பகவத் கீதை வெளியான தினம் அதன் ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் பகவத் கீதை அடங்கிய காணொலியை பகிர்ந்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், பகவத் கீதை ஜெயந்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் இலட்சகணக்கானோர் அதன் 12 மற்றும் 15 வது அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களை உச்சரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். பகவத் கீதையில் கிருஷ்ணன் தெரிவித்துள்ள அறிவுரைகளை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
கீதையில் குறிப்பிட்டுள்ள மதிப்பீடுகள் மக்களால் கொண்டாடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். பகவத் கீதையில் பொதிந்துள்ள உன்னத இலட்சியங்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்கள் வாழ்க்கையை கருணையுடனும், முழுதிறனுடன் வாழ்வதற்கு கீதை ஊக்குவிப்பதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.