பங்களாதேஷில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷின் மத்திய பகுதியில் உள்ள முஷிகஞ்ச் மாவட்டத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருமண வீட்டாரை ஏற்றிச்சென்ற பேருந்தும் மற்றொரு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட நிலையில் மேலும் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து டாக்கா-மாவா நெடுஞ்சாலையின் கேரனிகஞ்ச் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து குறித்து தகவலறிந்து விரைந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டதுடன் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.