படையினரின் உயிரிழப்பு குறித்து போலித்தகவல் – CID இல் முன்னிலையானார் பியல் நிஷாந்த!

நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த, குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிட்டதாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து வாக்குமூலம் வழங்கவே இன்று(திங்கட்கிழமை) காலை அங்கு முன்னிலையாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
அண்மையில் கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் பிரயோகம் மற்றும் வெடிப்பு சம்பவங்களில் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் சிலர் உயிரிழந்ததாக அவர் கருத்து வெளியிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் தற்போது அவரிடம் இதுகுறித்து வாக்குமூலம் பெறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.