பதவியில் இருந்து விலகமாட்டேன் என்கிறார் ரணில் விக்ரமசிங்க

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்றும் தொடர்ந்தும் தானே பிரதமராக பதவி வகிப்பதாகவும் தற்போது அறிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தமையை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஒருவர் பதவியில் இருக்கும்போது இன்னுமொருவருக்கு பிரதமர் பதவியினை வழங்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும் நபிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பிரதமரை பதவி நீக்குதல் அல்லது பிரதமர் தனது பதவியினை ராஜினாமாச் செய்வதன் மூலம் மட்டுமே ஜனாதிபதி புதிய பிரதமரை தெரிவு செய்யமுடியும் என்றும் ரணில் விக்கிரம சிங்க குறிப்பிட்டுள்ளார்.
இன்றையதினம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்ததுடன் கட்சியின் முடிவை சபாநாயகர் கருஜயசூரியவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தது.
இதனையடுத்தே ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மகிந்த ராஜபக்சவை பிரதமாராக்கியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.